புதன், 28 நவம்பர், 2018

கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில், 1 லட்சம் கான்கிரீட் வீடுகள்

டெல்டா பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில், 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 






இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு மனசாட்சிப்படி நிதி வழங்கும் என நம்புகிறோம் .கஜா புயலுக்கு நாகையில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 27 பொருட்கள் அடங்கிய நிவாரண பைகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 
5 நாட்களுக்குள் நிவாரண பொருட்கள் முழுமையாக வழங்கப்படும். 
பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில், 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். 
கஜா புயலால் நாகை மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. நாகையில் இதுவரை 341 மின்மாற்றிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. 
அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக